இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து ‘X’ சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தூதுவர் தெரிவித்துள்ளதாவது, இந்த கலந்துரையாடலின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, சர்வதேச குற்றங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க நம்பகமான அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், பொருளாதாரங்களுக்கு பங்களிக்கும் வர்த்தக பாதைகளை பாதுகாத்தல் மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் செயல்பட இரு தரப்பும் மீண்டும் உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







