பிபிசி எச்.எஸ்.பி.சி ஏர் ஃப்ரான்ஸ் (BBC, HSBC , Air France மற்றும் IKEA) உள்ளிட்ட சுமார் 200 முக்கிய இணையத்தளங்கள், நிதி தகவல்களை திருடவும் ஆப்பிள் சாதனங்களை பாதிக்கவும் முயன்ற தீங்கிழைக்கும் இணைய தாக்குதலுக்கு இலக்காகியதாக பிரபல ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.

பெரிய நிறுவனங்கள் பயனர்களின் இணைய அனுபவங்களை தனிப்பயனாக்க பயன்படுத்தும் டிஜிட்டல் தளமான Optimizely வழங்கும் கருவிகளில் ஹேக்கர்கள் சிதைக்கப்பட்ட JavaScript குறியீட்டை செலுத்தியதாகவும், சுமார் 178 இணையத்தளங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் Cyber News தெரிவித்தது.

ஹேக்கர்கள் பயனர்களின் கிரெடிட் கார்டு எண்கள், கிரிப்டோகரன்சி ஆகியவற்றை திருடவும், அத்துடன் ஆப்பிள் சாதனங்களை மேலும் சுரண்டுவதற்காக குறியீட்டை பதிவேற்றவும் முயன்றனர்.

“இந்த பட்டியலில் உலகின் அதிகம் பார்வையிடப்படும் சில தளங்கள் அடங்கும்: Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (UAE), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock” என இந்த ஹேக்கை முதலில் கண்டுபிடித்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஸ்கொட் ஹெல்ம் திங்கட்கிழமை தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தாக்குதல் நடத்தியவரின் (கிரிப்டோ) பணப்பைகள் சுமார் 7,040 டொலர்களை பெற்றிருந்தன, அவை அனைத்தும் நவம்பர் 16 ஆம் திகதி சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள்” என அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட தளங்களில் இருந்து பெரும்பாலான தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுவிட்டதாக ஹெல்ம் திங்கட்கிழமை தனது பதிவில் தெரிவித்தார்.

Optimizely ஒரு அறிக்கையில், “சில Optimizely Web Experimentation வாடிக்கையாளர்களை பாதித்த பாதுகாப்பு சம்பவத்தை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்தது.

“பாதிக்கப்படக்கூடிய பாதை தடுக்கப்பட்டுள்ளது, செலுத்தப்பட்ட குறியீடு அகற்றப்பட்டுள்ளது, மேலும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது” என ஆப்டிமமைய்லி தனது எக்ஸ் தளத்தில்  மேலும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here