Sunday, November 8, 2026
No menu items!

கைது

17 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போலி நாணயத்தாள் உபயோகம் – கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்..!

57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் வைத்திருந்த 04 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை...

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது..!

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21.12.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53...

தப்பி ஓடிய சந்தேக நபர் –  வலை வீசி தேடும் பொலிஸார்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்றுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு...

நெவில் டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடத்தல் மற்றும் சட்டவிரோத சிறைப்படுத்தல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து சோதனை – கலால் அதிகாரிகள் கைது..!

கொத்தடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனைக்கு சென்று வீட்டு உரிமையாளர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 05 கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவிக்கையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கலால் திணைக்கள அதிகாரிகள்...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

கொட்டாவ ஹோகந்தர வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் பெண் ஒருவர் கேரள கஞ்சாவுடன் இன்று (19.12.2024) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐந்து இலட்சம் ரூபா மற்றும் 66 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட...

வவுனியாவில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிக்கிய மூவர்..!

வவுனியா - புளியங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள்...

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை – தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது..!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயதுடைய நபர்  தப்பிச் சென்ற நிலையில் குறித்த நபர்  கைது செய்யப்பட்டு இன்றைய தினம் திங்கட்கிழமை (16.12.2024) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நபரை எதிர்வரும்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் வனப்பகுதி ஒன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை , ஹந்தபான்கொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்  ஆவார். சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img