மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் ஏற்படக்கூடும்.

இன்று (08) பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை அதிகாலை 1 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here