நாட்டில் 50 கிலோ சிமெந்த் மூட்டை ஒன்றின் விலை ரூ.100-ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிமெந்த் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலைத் திருத்தம் உள்ளூரில் தயாரிக்கப்படும் சிமெந்து மற்றும், இறக்குமதி செய்யப்படும் சிமெந்து ஆகியவற்றுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு கட்டிடச் செலவுகளை அதிகரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் கட்டிடப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்தப் புதிய விலைத் திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here