Thursday, April 30, 2026
No menu items!

சர்வதேச தொழிலாளர் தினம்

ஆரம்பமாகியுள்ள மே தின பேரணிகள் !

சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒட்டி நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் மே தின பேரணிகள் தற்போது தொடங்கியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் காலி முகத்திடலில் நடைபெறும். மேலும், பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமகி ஜன சந்தவின் மே தினக்...

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக 5000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வருகை!

தொழிலாளர் தினத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடைபெறும் மே தின பேரணிக்காக, தேசிய மக்கள் சக்தி (NPP) சுமார் 5,532 பேருந்துகள் வரும் என்று காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களின் செய்திகள் படி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை காவல் ஆய்வாளர் (டி.ஐ.ஜி) இந்திக ஹபுகொட, சுமார்...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சரின் வாழ்த்துச் செய்தி!

தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, 'இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் - உலக மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும்...

பிரதமரின் மே தினச் செய்தி!

உழைக்கும் மக்கள் வியர்வை சிந்தி, தங்கள் உயிரைத் தியாகம் செய்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, வெற்றிகரமானதொரு ஆண்டில் மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மே தின அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக நாட்டைப் பாதித்து வரும்...

எதிர்க்கட்சி தலைவர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் கைகோர்த்து முதலில் இந்த அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின்...

ஜனாதிபதியின் மே தினச் செய்தி!

ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கச் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில்,...

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. தொழிலாளர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும், இந்த நாள் தொழிலாளர்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தையும், நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது. சர்வதேச தொழிலாளர் தினம் என்பது போராட்டம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img