சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ஊடாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விலக்குகள் பெற்றதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, மககெண்ணை விலைகள் சரிந்தன.

இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் 2.09% சரிந்து ஒரு பீப்பாய் $78.89 ஆகக் குறைந்தது. WTI ரக எண்ணெய் 60 சென்ட்கள் குறைந்து ஒரு பீப்பாய் 76 டொலர்களாக குறைந்துள்ளது. போர் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக வெளியான செய்திகள் காரணமாக முன்னதாக இவற்றின் விலைகள் அதிகரித்திருந்தன.

இந்நிலையில்,ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை, நாளொன்றில் 1.5 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய மசகு எண்ணெய் உலகச் சந்தைகளை வந்தடைய வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அபாயங்கள் தொடர்வதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.லெபனானில் சனிக்கிழமை நடந்த இஸ்ரேலியத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், இவ்வாறான சிக்கல்கள் காரணமாக ஒரு நிரந்தரஅமைதி ஒப்பந்தம் ஏற்படுவது சவாலாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here