Saturday, April 25, 2026
No menu items!

ஜூலை

எரிபொருளின் விலையில் மாற்றமா?

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாத முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை (ஜூலை 30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்காக 600,768 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மொத்தமாக ரூ.3,003,840,000 வழங்கப்பட உள்ளது. தகுதி பெற்ற பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜனவரி முதல் ஜூலை காலப்பகுதியில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10.3% வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.!

கறுப்பு ஜூலை படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன்,  வடக்கு மாகாணசபையின்...

பேரூந்து கட்டணத்தில் மாற்றமா!

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 5% குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 28 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வருடாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 16 ஆம் இலக்க கட்டளைக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.  

கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு…

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, நவம்பர் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img