Monday, October 5, 2026
No menu items!

தீயணைப்பு வாகனங்கள்

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

மஹரகம – பிலியந்தலை வீதியில் வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

நிதியுதவி வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கட்டுநாயக்க, பியகம, சீதாவக மற்றும் வத்துபிடிவலை தொழில்துறை வலயங்களுக்கு 12 செட் உபகரணங்களை கொள்வனவு செய்ய 300 மில்லியன் ஜப்பானிய யென்னை (தோராயமாக LKR 590 மில்லியன்) நிதியுதவி வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று (20/03/2025) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை முதலீட்டு சபை (BOI)...

மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து !

தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால், பின்புறத்தில் தொடங்கிய தீ, முன் மற்றும் மேல் தளங்களுக்கு...

அக்குரணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

அக்குரணையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

கட்டுகஸ்தோட்டை பகுதியில் 48 மணி நேர நீர் வெட்டு

கட்டுகஸ்தோட்டை பகுதியில் சில இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கட்டுகஸ்தோட்டை நீர்...
- Advertisement -spot_img