Wednesday, June 24, 2026
No menu items!

தீர்வை வரி

ட்ரம்பின் வரிகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா கோரிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. அத்துடன் அந்த நாடுகள்...

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் – வலியுறுத்தும் ரணில்!

‘‘அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் விளக்கமளித்து நேற்று (16/04/2025) விசேட அறிவிப்பொன்றை...

அமெரிக்க வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது. இலங்கை மீதான பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதமாக அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இலங்கையில் பெரும் பொருளாதார பாதக நிலை உணரப்பட்டிருந்தது. இதனை அடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன்,...

அமெரிக்காவின் தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்..!

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், சீனாவிற்கான வரியை அவர் அதிகரித்துள்ளதுடன் இது அமெரிக்க - சீன வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் பல உலக நாடுகளுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமுலுக்கு வந்திருந்தது. இதன்படி,...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img