Wednesday, June 24, 2026
No menu items!

பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக...

இம்மாதம் இறுதிக்குள் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதிக்காக இம் முறை 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர் இல்லாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த...

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு…!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால்...

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு…!

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பிலும் மற்றும் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஊழியர்கள் கறுப்பு நிற உடையணிந்து கையில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் நிலையில், துணை வேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில்...

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் 58ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று58ஆவது நாளாகவும் தொடர்கிறது. 15% சம்பளக் குறைப்பு மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது இப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம். இப் போராட்டம் குறித்து  அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற  ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்த  6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img