அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here