Tuesday, July 14, 2026
No menu items!

பாலஸ்தீனியர்கள்

காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

காசா இரத்தக் காடாக மாறும் வேளையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்–நெதன்யாகு பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

இஸ்ரேல் தாக்குதலில் காசா இரத்த ஆறாகிறது – 80க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 400 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல உயிரிழப்புகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ராமல்லாவின் வடகிழக்கில் உள்ள காஃப்ர் மாலேக் மீது இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்...

காஸாவிற்கு ஆதரவு வழங்கும் ஐரோப்பிய நாடுகள்..!

காஸா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், பேச்சுவார்த்தை குழு ஒன்றை டோஹாவிற்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்கும் நான்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் எகிப்து தலைமையிலான காஸாவின் மறுகட்டமைப்புக்கான திட்டத்தை ஆதரிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள்...

காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை..!

பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸுடனான புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (19) முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், 15 மாத மோதலுக்குப் பிறகு காசாவில் இன்னும் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான...

பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்..!

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நா வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img