அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு பின்னர் காசாவில் போர் நிறுத்தத்திற்காக இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்களும் ஹமாஸும் கத்தாரில் நேரடியாக இல்லாத முறையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நேரத்தில், ஏமனில் ஹூதி குழுவினர், இரண்டாவது நாளாகவும் செங்கடலில் பயணித்த கப்பல்களில் ஒன்றை ராக்கெட் கைக்குண்டுகள் மூலம் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல்–பாலஸ்தீன் யுத்தம் தொடரும் நிலையில், இதுவரை 57,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1,36,617 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில், இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன், 200 பேருக்கு மேல் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here