Saturday, November 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

மீண்டும் அமைக்கப்படும் சோதனைச் சாவடியால் மக்கள் அச்சம்..!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த...

யாழ் – சுகாதார நகர திட்டம் – ஆளுநரின் ஆக்கபூர்வ தீர்மானம்..!

'யாழ்ப்பாணம் - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை காலை (06.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப் பரப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் பாவனையை மட்டுப்படுத்துவதன் தேவைப்பாடு ஆராயப்பட்டதுடன் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள...

தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவருக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம்  ஒன்றுக்கு...

உத்தேச மின் கட்டணம் – பொதுமக்களின் கருத்துக் கோரல் வட மாகாணத்தில் தீவிரம்..!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் வட மாகாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தேச மின்சார கட்டணம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

துணிந்து செயல்பட்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர்..!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில்...

பாவனையற்று காணப்படும் பொருளாதார மத்திய நிலையம்..!

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்பாடு இல்லாத நிலையில் காணப்படுகின்றது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும்...

யாழில் தேசிய தைப்பொங்கல் விழா -கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானம்..!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும...

கௌதாரி முனையில் இனிமேல் மணல் அகழ்வுக்கு அனுமதி இல்லை..!

கௌதாரி முனையில் மண் அகழ்வுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கௌதாரி முனை ஒரு முக்கியமான பிரதேசம். அந்த...

இந்த ஆண்டு எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு..!!

வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள எலிக்காய்ச்சல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக அதன் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாதிரிகள் கால்நடை மருத்துவ திணைக்களத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் யாழ்.மாவட்டத்தில்...

மண் அகழ்வால் எழுந்த ஆர்ப்பாட்டம்..!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பகுதியிலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img