தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார்.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இந்த விசேட போக்குவரத்து சேவை நடைமுறையில் இருக்கும் என சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார்.

இன்று வழமையான பயணங்களுக்கு மேலதிகமாக ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட விசேட பயணங்கள் இயக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்த விசேட போக்குவரத்து சேவையின் மூலம் கடைசி பயணி வரை போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கும் குறித்த போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இன்று நாம் 102 பஸ்களை மேலதிக பயணங்களுக்காக ஏற்பாடு செய்துள்ளோம். நாளை மேலதிகமாக 74 பயணங்கள், நாளை மறுநாளும் 46 பஸ்களை வழமையான நேர அட்டவணைகளுக்கு மேலதிகமாக இந்த பண்டிகையை முன்னிட்டு இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஆண்டுகளின் தரவுகள் எங்களிடம் உள்ளன, அதனால் இந்த பயணிகள் முறை எப்படி இருக்கும் என நாம் அறிவோம். அதற்கு மேலதிகமாக கண்டி ரயில் பாதை பாதிக்கப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு இவை அனைத்தையும் ஆய்வு செய்து மேலதிக பயணங்களை திட்டமிட்டுள்ளோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here