Sunday, November 8, 2026
No menu items!

ஹம்பாந்தோட்டை

கொழும்பில் பலத்த காற்றுடனான காலநிலை – அவதியுறும் மக்கள்..!

கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றமையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு முதல் கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில...

தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்!

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த சங்கங்களின் 3 வருடப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாமையும், சட்டத்திற்குப் புறம்பாக அதனை நடத்திச் சென்றமையும் இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வெலிகம, தெவிநுவர, திக்வெல்ல, பெரலபனாதர, கொட்டபொல,...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ , வடமத்திய , கிழக்கு...

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை !

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை...

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், இப் பிராந்தியங்களின்...

நிறைவடைந்துள்ள நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் !  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க அச்சக அதிகாரி பிரதீப் புஷ்ப குமார குறிப்பிட்டுள்ளார். 9 மாவட்டங்களில் தபால் வாக்குகள் அச்சிடும் பணி...

இன்றைய நாளுக்கான வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய...

இறக்குமதி செய்யப்பட்ட 490 வாகனங்கள் விடுவிப்பு !

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. தற்போது 490 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.      
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img