உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுகள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க அச்சக அதிகாரி பிரதீப் புஷ்ப குமார குறிப்பிட்டுள்ளார்.
9 மாவட்டங்களில் தபால் வாக்குகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.








