அமெரிக்காவில் மூன்று பலஸ்தீன மாணவர்களை இலக்குவைத்து கடந்த சனிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
வேர்மன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நபர் ஒருவர் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மூவரும் அரபிமொழியில் உரையாடிக் கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்கப்பட்ட மூவரும் ஹிஷாம் அவர்தானி, கின்னன் அப்தெல் ஹமீத் மற்றும் தஹ்சீன் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹிஷாம் முதுகிலும், தஹ்ஸீன் மார்பிலும் தாக்கப்பட்டுள்ளதுடன் கின்னன் சிறு காயங்களுடனும் காணப்படுவதாகவும் சந்தேக நபரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என மாணவர்களின் குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.