Tamil News Channel

அயல் வீட்டில் தண்ணீர் குடித்த பெண்  மரணம்..!

death

வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி என்ற (49)வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் ஞாயிறு (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை.

இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி அவரது வீட்டுக்கு கொண்டு செல்லும்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

மேலும் சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுளதுடன் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts