“அரசாங்கம் கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது” – பேராசிரியர் பிரியங்க துனுசிங்க!
தற்போதைய அரசாங்கம் பாதீட்டுப் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைத்தாலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் இன்னும் நீடிக்கிறது என கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல் ஆய்வுப் பிரிவு பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கடந்த ஆண்டில் அரசாங்கம் அதிக அளவில் கடன் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. தற்போது பெறப்படும் கடன்கள் பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களிலிருந்தே எனவும் விளக்கினார்.
அவர் மேலும் கூறியதாவது, “வெளிநாட்டு நிதிச் சந்தைகளிலிருந்து கடன் பெறும் திறன் மிகக் குறைந்துள்ளது. பலதரப்பு நிறுவனங்களும் முன்பை விட குறைந்த சலுகை வட்டியில் மட்டுமே கடன் வழங்குகின்றன. வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் கட்டாயம் கடன் பெற வேண்டியுள்ளது,” என தெரிவித்தார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் அதிக கடன் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், 2026ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் கடன் இலக்குகள் கடனைக் குறைக்கும் நோக்கத்தைக் காட்டுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
![]()