January 13, 2026
ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Dec 21, 2023

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன் முதல் கட்டமாக புதிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து சகலருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டிஜிட்டல் அடையாள அட்டைக்கான புகைப்படத்தை பெறுவதற்கான கட்டணம் 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அல்லெஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 150 ரூபா முதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *