அனுராதபுரம் – கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19வயதுடை யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டபோதே யுவதி ஒருவர் இளைஞனாக வேடமணிந்து காதலித்தது மாணவிக்கு தெரியவந்துள்ளதுடன் இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மார்ச் மாதம்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here