அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே வளைந்துள்ளதுடன் திறந்தவௌியில் வைக்கப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் சிலையின் சேதமடைந்த தலைப்பகுதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரகாம் லிங்கன் 1860 இல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார் என்பதுடன் அவரை பெருமைப்படுத்தும் வகையில், வாஷிங்டனில் உள்ள கரிசன் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை வடிவமைப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (22.06) அமெரிக்காவின் வாஷிங்டனில் சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.