இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) பெரும்பான்மை இடங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பை நெருங்கியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக வழங்கிய ஆதரவு, 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை விஜய் தலைமையிலான கூட்டணி கடக்க உதவியது என இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து சென்னையில் உள்ள டிவிகே தலைமையகத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன, கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் பெருமளவில் கூடி, கொடிகளை அசைத்து, வாணவேடிக்கைகளை நிகழ்த்தி, விஜய்க்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் முறையாக அரசியலில் நுழைந்த பிறகு, அவரது டிவிகே கட்சி முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில், இந்த முன்னேற்றம் விஜய்க்கு ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிகவிடமிருந்து கிடைத்த இந்த ஆதரவு, தமிழக அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க தேர்தல் மறுசீரமைப்பாகக் கருதப்படுகிறது.








