பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர்.

அந்த படம் உலகம் முழுவதும் சுமார் 1350 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் ஆகியன தயாரித்திருந்தன.

இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம், ‘துரந்தர் தி ரிவென்ச்’ என்ற பெயரில் கடந்த மாதம் 19 ஆம் திகதி வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரையில் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படம் திரையில் 50 நாட்களை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘துரந்தர் தி ரிவென்ச்’ படம் எதிர்வரும் 14ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here