தேனை எந்த உணவுகளுடன் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தேனில் பல சத்துக்கள் உள்ள நிலையில், சில உணவுகளுடன் தேன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சூடான நீரில் தேன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியம் என்று கூறப்பட்டாலும், அதன் செயல்திறனைக் குறைக்கின்றது என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தேன் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமாம். மேலும் முடி உதிர்தல் மற்றும் எடை இழப்பிற்கும் வழிவகுக்கும்.

பூண்டு செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யும். மேலும் தேனுடன் சேர்க்கப்படும்போது, அது செரிமான பிரச்சனையை மோசமாக்கும்.

மாம்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளதுடன் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் தேனுடன் மாம்பழங்களைத் தவிர்ப்பது நல்லது.

மீன் மற்றும் இறைச்சியுடன் தேன் சாப்பிட வேண்டாம். இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here