February 9, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
News News Line Top புதிய செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Jan 11, 2024

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகள் இன்றைய தினத்தின் பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடு.

 ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் .

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *