இமாலய உடன்படிக்கைக்கும்  ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது  தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று முன்தினம் (13) ஊடகசந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உலகத்தமிழர் பேரவையும், புத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்ததைகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்திட்டமே இந்த உடன்படிக்கையாகும் என தெரிவித்தார்.

இவ் உடன்படிக்கையினை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில் ‘அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையினூடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது’ என்றும் குற்றஞ்சாட்டினார் எனவே அடுத்தகட்டமாக இவ் உடன்படிக்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்திறன் தங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here