இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர்.
நீராடச் சென்ற இவர்களில் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும், பிரதேச மக்களும் நீண்ட நேரமாக ஈடுபட்ட போதும் மீட்க முடியாது போனது.
இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வந்த வசந்தநகர் பகுதியை சேர்ந்த சிறுவன் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.