July 14, 2025
வெற்றியுடன் சென்னை அணி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

வெற்றியுடன் சென்னை அணி..!

Apr 15, 2024

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது.

முதலாது போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் லக்னோ சுப்ப்ர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னைக்கு வழங்கியது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடுய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை வீரர் மதீஷ பதிரன (Matheesha Pathirana) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாவது நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது நிலையில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் பத்தாவது நிலையில் உள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *