வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை குறித்த சீன பெண் கடுமையாக தாக்கியுள்ளார்.
குறித்த பெண் வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில், இங்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.