செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து SpaceX இன் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுவப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையத்தை வார இறுதியில் தொடங்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் இந்த முன்னேற்றமானது நாடு முழுவதிலும் உள்ள தொடர்பை கணிசமாக மேம்படுத்தும், இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைப்பதற்கும் தொலைதூரப் பகுதிகளிலும் இயற்கை அனர்த்தங்களின் போதும் தொடர்பாடல்களைப் பேணுவதற்கும் முக்கியமானதாகும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய இலங்கையின் பிராட்பேண்ட் இணைய சேவைகள் சராசரியாக 22.51 Mbps பதிவிறக்க வேகத்தையும் 6.9 Mbps பதிவேற்ற விகிதத்தை வழங்குகிறது.
மேலும், நாட்டில் ஸ்டார்லிங்க் விலைகளை வெளியிடுவதற்கு முன் SpaceX ஆனது மலிவு விலையைக் கருத்தில் கொள்ளும் எனவும் Starlink இணையம் உலகம் முழுவதும் சேவை செய்யும் 99 நாடுகளில் அதே விலையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.