காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலியா எச்சரித்துள்து.

இந்த தகவலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பு என எண்ணி செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தினது எதிர்காலமானது நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டு தேசங்களின் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய சூழ்நிலை அனைவருக்கும் தோல்வியாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முடிவிற்கு வந்த மோதல் இடைநிறுத்தமானது இரு நாட்டிற்கும் பாரிய பின்னடைவு என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here