இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான விநியோகஸ்தர்கள் இன்மையால், இலங்கையில் சுமார் 10 மாதங்களாக அதிகாரப்பூர்வ வாகனப் பதிவுத் தகடு தயாரிப்பு தாமதமாகியுள்ளன.

இதன் காரணமாக சுமார் 400,000 பதிவு தகடுகள் தயாரிக்கும் செயற்பாடு தாமதமாகியுள்ளன. புதிய தகடுகள் எதிர்வரும் ஜூன் 14, 2026-க்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பலர் பல்வேறு வண்ணங்கள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் தங்களுக்கென தற்காலிகத் தகடுகளைத் தயாரித்துக் கொண்டுள்ளனர்.

வாகனத்திற்கான முன்பக்கத் தகட்டிற்கு வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களும், பின்பக்கத் தகட்டிற்கு மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துக்களும் அனுமதிக்கப்பட்ட வடிவமாகும்.

எனவே உருவாக்கப்பட்ட தற்காலிகத் தகடு அதிகாரப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டிருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த தகடு படிக்கக் கடினமாகவோ , அலங்கார எழுத்துருக்கள், பொருந்தாத வண்ணங்கள் அல்லது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரநிலைகளுடன் பொருந்தாத வடிவமைப்புகளைக் கொண்டிருந்தாலோ அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெளிவற்ற அல்லது தரமற்ற தகடுகளுக்கு மாத்திரமே அபராதம் விதிக்கிறது என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here