வாகன கொள்வனவிற்காக மக்கள், கடன் வசதிகளின் ஊடாக பெறக்கூடிய கடனுக்கான பெறுமதி (LTV) விகிதங்களில் கடுமையான அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

இன்று 25 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதற்கமைய பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று இலங்கையில் 1 வருடத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், வங்கிகள் அதன் சந்தை மதிப்பில் 60% வரை மாத்திரமே கடன் வழங்க முடியும்.

சரக்குந்துகள், லொரிகள், வாடகைக் கார்கள் போன்ற புதிய மற்றும் ஏறக்குறைய புதிய வர்த்தக வாகனங்களுக்கும் அதிகபட்ச கடன் மதிப்பு 60% வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம் கார்கள், எஸ்யூவி-கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற தனிப்பட்ட வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு 40 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள்ஆகியவற்றுக்கு இவை பொருந்தும்.

வாகனச் சந்தைக்குள் பாயும் கடன் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here