Tamil News Channel

உலகின் முதலாவது மிஸ் ஏ.ஐ….

ai2

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ (AI) பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் உருவாக்கப்பட்ட  ஏ.ஐ மாடல் மிஸ் – ஏ.ஐ பட்டத்தை பெற்றுள்ளது.

இந்த ஏ.ஐ மாடல், ஹிஜாப் அணியும் ஒரு வாழ்க்கை முறையை கொண்டவராக சமூக ஊடகங்களில் இயங்கி வருகின்றது.

அதேவேளை, குறித்த உலக அளவிலான மிஸ் –  ஏ.ஐ போட்டியானது அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயற்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் 10 ஏ.ஐ மாடல்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இவற்றில், பிரான்ஸை சேர்ந்த மாடல் இரண்டாம் இடத்தையும் போர்த்துகலை சேர்ந்த மாடல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ (AI) பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் உருவாக்கப்பட்ட  ஏ.ஐ மாடல் மிஸ் – ஏ.ஐ பட்டத்தை பெற்றுள்ளது.

இந்த ஏ.ஐ மாடல், ஹிஜாப் அணியும் ஒரு வாழ்க்கை முறையை கொண்டவராக சமூக ஊடகங்களில் இயங்கி வருகின்றது.

அதேவேளை, குறித்த உலக அளவிலான மிஸ் –  ஏ.ஐபோட்டியானது அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயற்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் 10 ஏ.ஐ மாடல்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இவற்றில், பிரான்ஸை சேர்ந்த மாடல் இரண்டாம் இடத்தையும் போர்த்துகலை சேர்ந்த மாடல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts