Tamil News Channel

ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

champions-trophy-1733427831

2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.

கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகின்றது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இறுதியாக 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து, ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண தொடரைப் பாகிஸ்தான் நடத்தியிருந்தது.

இதேவேளை, இந்த தொடரில் பங்கேற்பதற்காகப் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு இந்திய அணி மறுத்துள்ள நிலையில், அந்த அணி பங்கேற்கும் சகல போட்டிகளும் டுபாயில் இடம்பெறவுள்ளன.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts