பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து யாழ்ப்பாண பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர்.
அதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கையளித்தனர்.
நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரியே கடமை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையின் போது இந்த கடமை விலகல் பெரும் தக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.