பெப்ரவரி 1ஆம் திகதி முதல்  எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு திட்டமிட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும், எரிபொருள் விலையை தவிர, மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன்,அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால்  11 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கியூபா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கியூபாவில் பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளமையினால் எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் பணவீக்கம் மேலும் மோசமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here