July 14, 2025
கணவரை கொலை செய்த மனைவி..!!
News News Line Top Updates புதிய செய்திகள்

கணவரை கொலை செய்த மனைவி..!!

Apr 16, 2024

கணவரை கட்டையால் மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியைச் சேர்ந்தவர் ரத்னாகரன் என்பவருக்கும்  அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த மனைவி தனது கணவர் ரத்னாகரனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் ரத்னாகரன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நிலக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த பொலிஸார், ரத்னாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது மனைவியை  கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தனது கணவர் ரத்னாகரனை சாந்தா கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *