கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதுடைய கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்தின் போது அயல் வீட்டில் இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு பெரிதாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

இதன்போது அயல் வீட்டில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ள நிலையில் இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here