முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி தொழிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிக்கு வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஹேவகே வலியுறுத்தினார்.

“முச்சக்கர வண்டி தொழிலுக்குள் நுழையும் வயதை 40 ஆக தீர்மானிக்க எதிர்ப்பார்த்துள்ளோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு செல்கின்றனர். இதன் காரணமாகவே கல்வியில் மாற்றங்களை கொண்டு வருகிறோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here