
கண் இமை கொட்டுகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
பொதுவாக அனைவரும் தடிப்பான நீண்ட கண் இமைகளையே விரும்புகிறார்கள். ஆனால் அவை இல்லாதபோது என்ன நடக்கும்?
தற்போதைய சமூகத்தினர் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக கண் இமை உதிர்தல் இருக்கிறது.
கண் இமைகள் வேகமாக விழுந்தால், அதைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் இது உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். அது பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
தைராய்டு
தைராய்டு பிரச்சனை காரணமாக கண் இமைகள் உதிரலாம். தைராய்டு சுரப்பி உடலின் தேவைக்கேற்ப தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாதபோது, முடி வளர்ச்சியை குறைக்கும்.
ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண் இமைகள் விரைவாக விழும். எனவே, உங்கள் கண் இமைகள் அசாதாரணமாக விழுந்தால் தைராய்டை பரிசோதித்து பார்க்கவும்.
தொழுநோய்
தொழுநோய் போன்ற தோல் பிரச்சனைகளிலும் கண் இமைகள் விழக்கூடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொழுநோயின் விளைவுகள் கண்கள் மற்றும் கண் இமைகளைச் சுற்றி காணப்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், தோல் அதன் உணர்திறனை இழக்கிறது மற்றும் கண் இமைகள் பலவீனமடைந்து விழ ஆரம்பிக்கும்.
தோல் அழற்சி
தோல் அழற்சி என்பது ஒரு வகையான தோல் பிரச்சனையாகும். சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு எற்பட்டால் இந்த பிரச்சினை ஏற்படும். இது தீவிரமடைந்தால், அதன் தாக்கம் முடி மற்றும் கண் இமைகளில் இருக்கும்.
உடல் ரீதியான பிரச்சனைகள் மட்டுமின்றி, சரியான கவனிப்பு இல்லாமல் இருப்பதாலும் கண் இமைகள் உதிரும். எனவே, இதை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கண் இமைகளில் மஸ்காரா மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும்.
கண்களை சுத்தம் செய்யும் போது கண் இமைகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது கண் இமைகளை சேதப்படுத்தும்.
தோலைப் போலவே முடி மற்றும் கண் இமைகளுக்கும் ஊட்டச்சத்து தேவை. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல நேரங்களில் கண் இமைகள் விழ ஆரம்பிக்கும்.
எனவே, இதைத் தடுக்க, நீங்கள் பாதாம் அல்லது ஒலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். கண் இமைகளில் எந்தவிதமான கிரீம் அல்லது செயற்கையான பொருளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.