கண் நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் 21510 ‘பிரெட்னிசோலோன்’ கண் திரவ குப்பிகள் தரம் குறைந்ததாக காணப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இக் கண் திரவத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தேசிய கண் வைத்தியசாலையின் இரு நோயாளிகள் முழுமையாக பார்வையற்றவர்களாகவும்,
நுவரெலியா பொது வைத்தியசாலையின் சுமார் பதினைந்து நோயாளிகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதைய சுகாதார அமைச்சரும், செயலாளரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.