கடந்த ஞாயிற்றுக்கிழமை(18), வடக்கு காசாவிற்கு உணவு எடுத்துச் சென்ற வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் காரணமாக வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது.
உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் உணவு ஏற்றிச் சென்ற மேலும் பல பாரவூர்திகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் சாரதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.