January 20, 2026
காணாமல் போன  மீனவர்கள் 4 பேர் மீட்பு..!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

காணாமல் போன மீனவர்கள் 4 பேர் மீட்பு..!!

Jul 7, 2025

இந்திய மீன்பிடி படகில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

அதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 4 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடு, இவர்கள் மினிகோய் தீவவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 4 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்குப் பிறகு, மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *