July 8, 2025
காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த முடிவு
News News Line Top Updates புதிய செய்திகள்

காதலர் தினம் கொண்டாட வராத காதலி: காதலன் எடுத்த முடிவு

Feb 15, 2024

இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்த சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற 21 வயதுடைய இளைஞன் காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும், அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த திடீர் மரணம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தில், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பின் பின்னர் குறித்த நபர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை பலமுறை அழைக்க கேட்டதாகவும் இறந்தவரின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இறப்பதற்கு முன், குறித்த இளைஞன் தனது கையை கூறிய ஆயுதத்தால் வெட்டிக் கொண்டதை மரண விசாரணை அதிகாரி அவதானித்துள்ளதுடன் இந்த மரணம் தற்கொலை என தெரிவித்த மரண விசாரணை அதிகாரி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *