கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.07.2024) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் முரளிதரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளர்.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பதில் தலைவர் முரளிதரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பேராளர் மற்றும் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.