குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முந்தினம் அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.
குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14000ற்கு மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது. இந்த வைரசானது ஆபிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்றும் சமீபத்தில் கூறினார்.
வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் அறிவித்தது.


